ஓம் நமசிவாய போற்றி🌺🙏

ஏகன் அநேகன்
-==================
பதிவு=1
========
ஏகன்=ஒருவன்
அநேகன்=ஒருவன் இல்லாதவன் ,பலநிலையில் இருப்பவன்
அதர்வண வேதம்( அதர்வசிரோபநிஷத்)
=======================================
! ஶிவ ஏகோத்யேய!
“யத்பரம்ப்³ரஹ்ம ஸ ஏக: ய ஏக: ஸ ருத்³ர:
ஏகோ ஹி ருத்³ரோ ந த்³விதீயாய தஸ்மை:”
பரம்பொருள் ஒருவனே ; அந்த ஒருவன் சிவனே
அதர்வண வேதத்தின் அதர்வசிரமும் இரண்டற்ற ஏக பரம்பொருள் ருத்ரனே என்று முழங்குகிறது:
அதர்வஶிரோபநிஷத் பாஷ்யத்தில் "ஏகருத்ர:" எனும் பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது பரமேஶ்வரரே ஶுத்தப்ரஹ்மம் என்று கூறுகிறார்
யஜுர்வேதம்
===============
யஜுர்வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை, “ஏகம்” - இரண்டற்ற ஒரே பரம்பொருள் ருத்ரனே என்றுரைக்கிறது :
ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஷ்டே
அதே யஜுர்வேதத்தின் ஸ்வேதாஸ்வதரோபநிஷத்தும் ருத்ரனே இரண்டற்ற ஒருவன் என்கிறது:
ஏகோ ஹி ருத்³ரோ ந த்³விதீயாய தஸ்து²ர்ய இமாம்ʼல்லோகானீஶத ஈஶனீபி⁴꞉।
ப்ரத்யங் ஜநாஸ்திஷ்ட²தி ஸஞ்சுகோசாந்தகாலே
ஸம்ஸ்ருʼஜ்ய விஶ்வா பு⁴வநாநி கோ³பா: ||
இரண்டற்ற ஒரே பரம்பொருள் ருத்ரன். அவனே இவ்வனைத்துலகங்களையும் தமது ஆற்றலால் ஆள்கிறான். அவனே அனைத்துலகங்களையும் படைத்து, காத்து பின் அவற்றை காலமுடிவில் அழிக்கிறான்.
சிவகீதை
=========
"ஏக ஏவ யதோ லோகாந் விஸ்ருஜாமி ஸ்ருஜாமிச
விவாஸயாமி க்ருஹ்ணாமி தஸ்மாதேகோஹமீஸ்வர:-அத்-6/37
பொருள்
======
சிவபிரான் கூறியது
-------------------------
யாதொரு காரணத்தால் ஒருவனாகவே ,சிருஷ்டிக்க எண்ணுகிறேனோ ,சிருஷ்டிக்கவும் செய்கிறேனோ,
சம்ஹரிக்கிறேனோ,என்னிடம் அடக்கிக்கொள்கிறேனோ
அந்த காரணத்தால் ஈஸ்வரனாகிய நான் "ஏகன்" எனப்படுகிறேன்
"ந த்விதியோ யதஸ்தஸ்தேஸ்து துரியம் ப்ரஹ்மயத்ஸ்வயம்
பூதாந்யாத்மநி ஸம்ஹ்ருத்யஸ் ஏகோ ருத்ரோ வஸாம்யஹம்"
அத்-6/38
பொருள்
=========
யாதொரு காரணத்தால் இரண்டாமவன் இல்லையோ,
யாதொரு காரணத்தால் பிரஹ்மத்துடன் ஆத்மா ஒன்றும்
நிலையில் நானே பூதங்களை என்னுள் ஒடுக்கிக்கொண்டு
வசிக்கின்றேனோ அதனால் நான் ஒரே ருத்ரன் "ஏகோ ருத்ரன்"
எனப்படுகிறேன்
"மய்யேவ ஸகலம் ஜாதம் மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்
மயி ஸர்வம் லயம் யாதி தத் ப்ரஹ்மாத்வயமஸ்ம்யஹம்" -அத்6/54
பொருள்
=======
அனைத்துமே என்னிடமிருந்தே தோன்றியது.அனைத்தும் என்னிடம் நிலைப்பெற்றுள்ளது.அனைத்தும் என்னிடமே ஒடுங்குகின்றது.
அதனால் நான் அத்வய பிரம்மமாகிறேன்.
(அத்வயம் என்றால் இரண்டற்றது.சிவனைத் தவிர இரண்டாவது வேறு பொருள் இல்லை.)
சிவனாகிய ஒருவரே அனைத்துமாய் இருக்கிறார்
மஹாபாரதம்
-----------------------------
ஈஸ்வர:சேதன:கர்த்தா:புருஷ:காரணம் சிவ:
விஷ்ணு:ப்ரஹ்மா சசீ சூர்ய: சக்ரோ தேவச்ச ஸான்வயா:
ஸ்ருஜயதே க்ரஸதே சைதான் தமோபூத: மிதம் யதா
சைதன்ய வடிவமான பரமசிவனே இவ்வுலகத்தை படைத்தவன்.
அவரே ஸர்வ ஸமர்த்தர் .அவரே எங்கும் நிறைந்த பரம்பொருள்
அவரே விஷ்ணு,ப்ரஹ்மா,ருத்ரன்,இந்திரன் மற்றுமுள்ள தேவர்கள்,மற்றும் அவர்களின் பரம்பரை எல்லோரையும் ,அவர் தன்னிடத்திலிருந்தே படைத்து தன்னிடத்திலேயே லயப்படுத்திக் கொண்டு ப்ரளயத்தில் தான் ஒருவரே எஞ்சி நிற்கிறார்.
ஆதித்ய புராணம்
ஏகம் சத்யம் விப்ர பஹுதா வதந்தி – ரிக் வேதம்
என்ற ரிக் வேத வாக்யம் பரமசிவனைத் தான் குறிக்கின்றது என்று ஆதித்ய புராணம் விவரிக்கிறது
இருப்பதே ஒரே சத்யமான பொருள் (பரப்ரஹ்மம்).அதை ஞானிகள் பலவாக கூறுகின்றனர்
திருச்சிற்றம்பலம்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்தா சரணம்
பா. சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹாசாஸ்த்ரு பரபிரம்ம ஸ்தானம்
திருகாடந்தேத்தி